குறுந்தொகை 93
93.தலைவி கூற்று.
திணை : மருதம்
கூற்று : தலைவி கூற்று
நல்நலம் தொலைய நலம்மிகச் சாஅய்
இன்உயிர் கழியினும் உரையல் அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவியஃது எவனோ அன்பிலங் கடையே.
- அள்ளூர் நன்முல்லையார்.
தெளிவுரை:
தோழி! நம்முடைய நல்ல பெண்மை நலம் கெடவும் உடலழகு மிகவும் மெலிந்து போகவும் எல்லாவற்றினும் இனிய நம் உயிர் நீங்குமாயினும் அவர்மாட்டுப் பரிவுரை பகராதே. அத்தலைவர் நமக்குத் தாயும் தந்தையும் அல்லரோ? அன்பு என்பது இல்லாவிடத்துப் புலவி உண்டாவது எதன் பொருட்டு ?
Comments
Post a Comment