குறுந்தொகை 92
92.தலைவி கூற்று.
திணை ; நெய்தல்
கூற்று ; தலைவி கூற்று
ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இறைஉற ஓங்கிய நெறிஅயல் மராஅத்த
பிள்ளை உள்வாய்ச் செரீஇய
இரைகொண் டமையின் விரையுமால் செலவே.
- தாமோதரன்
தெளிவுரை :
பகலவன் மறைந்த அகன்ற இடம் பொருந்திய ஆகாயத்தில் வளைந்த சிறகுகளைக் கொண்ட பறவைகள் தாம் தங்குவதற்கு ஏற்றபடி உயர்ந்ததும் வழியின் பக்கத்தில் வளர்ந்ததுமான கடப்ப மரத்திலுள்ள கூட்டில் இருக்கும் தம் குஞ்சுகளின் உள்வாயில் செருகுவதற்காக இரையைத் தம் அலகுகளில் எடுத்துக் கொண்டமையால் விரைந்து செல்லுகின்றன . அப் பறவைகள் இரங்கத்தக்கன.
Comments
Post a Comment